அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இரு தரப்பினரும் சட்டமன்றத்தில் தங்கள் தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
தவெக அரசு மீது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, புதிய மாவட்ட செயலாளர்களை பழனிசாமி நியமித்தார்.
தவெக அரசில் சி.வி. சண்முக தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்கலுடன் நாளை ஆலோசானை மேற்கொள்ள உள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் வரவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.







