மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், வடக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்