திமுக ஆட்சியில் பல சாதனை படைத்துள்ளோம் என தாங்கள் கூறுவதை விட, பயன்பெற்ற விவசாயிகள் கூறுவது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், இலவச மின்சாரம் பெற்ற 1 லட்சம் விவசாயிகளுடன் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். முன்னதாக, ஒரு லட்சமாவது மின இணைப்புக்கான ஆணையை உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விவசாயி கண்ணப்பிள்ளைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இலவச மின்சாரம் வழங்கியதால் விவசாய நிலப்பரப்பு 2 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா
இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 4830 மெகாவாட் கூடுதல் உற்பத்தி எனவும் குறிப்பிட்டார். மின் வெட்டு இல்லாத, சீரான மின் விநியோகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







