முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்துகளிலும் வருகிறது ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு’

பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு தெரியப்படுத்த, பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 500 பேருந்துகளில் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திட்டத்தின் மூலம், பேருந்துகளில் ஜி.பி.எஸ் உதவியுடன் செயல்படும் ஒலிபரப்பு கட்டமைப்பில், விளம்பரங்களும் ஒலிபரப்பி வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பு, சென்னை மாநகர பேருந்துகளில் ஜூலை மாதத்திற்கு பின்னர் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைச் செய்தி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

இதற்கு முன்பு இந்த திட்டம், தமிழ்நாட்டில் தனியார் சொகுசு பேருந்துகளில் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், புதிய இடங்களுக்கு ஒருவர் பேருந்தில் செல்லும்போது அவருக்கு வழிகாட்ட, சரியான இடத்தை சென்றடைய உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், செல்லவேண்டிய இடத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், விளம்பரங்கள் ஒலிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு, பயணத்தின் போது எரிச்சலை உண்டாக்கும் எனவும் பயணிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

Arivazhagan Chinnasamy

மே மாதம் 19 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்தது வாட்ஸ்அப்

Web Editor

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்- அதிரடி முடிவு

Web Editor