மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இரு மாநில எல்லையில் வனத்தில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி,…

தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது.

இரு மாநில எல்லையில் வனத்தில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி, கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமும் பக்தர்கள் பயணித்து வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

இதேபோல் தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகத்தின் லோயர்கேம்ப் பளியங்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 1,500-க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சித்திரை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் தருணத்தில் இரு மாநில எல்லையில் கொண்டாடப்படும் இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.