”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்…

காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் கமுதி, கடலாடி, முதுகுளத்துார், பரமக்குடி பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர்  ஜீவானந்தம் கூறியதாவது:
விவசாயிகளின் இடங்களில் காட்டு விலங்குகள் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட பட்டா விவசாயிகளுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கிறோம், இதனை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்க கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கொண்டு செல்லப்படும் என ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.