அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி குடும்பம்: பின்னணி குறித்து விசாரணை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினர் தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹார் (42) இருவரும் தனியார்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினர் தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹார் (42) இருவரும் தனியார் நிறுவனங்களில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு பிளைன்ஸ்போரோ பகுதியில் அவர்கள் சொந்த வீட்டை வாங்கி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் 10 வயது மகன், 6 வயது மகள் என நால்வரும் அவர்களது வீட்டில் கடந்த புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

முதலில் இதை கொலை வழக்காக போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது, கொலை – தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஓராய் பகுதியைச் சேர்ந்த விவேக் பிரதாப் சிங்கின் இளைய சகோதரர்தான் தேஜ் பிரதாப். தேஜ் பிரதாப் குடும்பத்தினரின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டதும், மாநில அரசு சார்பில், விவேக் பிரதாப் சிங் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்துகொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களது உடல்கள் இந்தியா கொண்டு வர இன்னமும் 5 முதல் 7 நாள்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. உடல்கூறாய்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. நியூ ஜெர்ஸியிலிருந்து வெளியாகும் ஊடகங்களில், தேஜ் பிரதாப் தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், தேஜ் பிரதாப் இந்த துயர முடிவெடுக்க என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.