Naa Ready தான்… வரவா… ஒரு நாள் முன்பே வெளியாகும் லியோ?

விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஒரு நாளைக்கு முன்பே வெளியாவதற்கு வாய்ப்புள்ளதாக கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ.  லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில்,…

விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஒரு நாளைக்கு முன்பே வெளியாவதற்கு வாய்ப்புள்ளதாக கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ.  லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் என நடிகர் பட்டாளமே களமிறங்கியுள்ளனர்.

‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வெளியானது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது.

https://twitter.com/kamala_cinemas/status/1710564620795326588

லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சென்னையில் அமைந்துள்ள கமலா திரையரங்கின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் படத்தின் வெளியீடு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னரே, அதாவது அக்.18ம் தேதி மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகள் திரையிட வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.