செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகள் சத்தியவதி (17). தேவனூர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சத்தியவதி 3 பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட
சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








