மார்வல் ஸ்டுடியோஸின் ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையின் அடுத்த பாகமான ‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ‘ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங்’, ‘னோ வே ஹோம்’ உள்ளிட்ட முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹோலண்ட், ஸெண்டயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் ‘ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ’ ஆகியோரின் காமிக்ஸ் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ‘டெஸ்டின் டேனியல் கிரெட்டன்’ இயக்கத்தில் உறுவாகியுள்ளது. இப்படம் ‘ஸ்பைடெர் மேன் னோ வே ஹோம்-ன்’ தொடர்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று, ஸ்பைடர்-மேனுக்கும் மார்க் ரஃப்பலோ மீண்டும் ஏற்று நடித்துள்ள புரூஸ் பேனரின் ‘ஹல்க்’ கதாபாத்திரத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய மோதல் காட்சி ஆகும். இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.




