பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் வசித்த இஸ்லாமிய சிறுவனின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், அண்மையில் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தனது தாய்க்கு பாத பூஜை செய்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, குஜராத்தின் வத்நகரில் தாங்கள் வசித்தபோது, தனது தந்தை, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனது இஸ்லாமிய நண்பரின் மறைவை அடுத்து அவரது மகனை, தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து படிக்க வைத்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
அன்றைய அந்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அப்பாஸ் ராம்சதா எனும் இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
சிறு வயதில் இவரது தந்தை இறந்துவிட்டதாலும், 5ம் வகுப்புக்கு மேல் இவரது கிராமத்தில் அப்போது பள்ளி இல்லாததாலும் நரேந்திர மோடியின் வீட்டில் அவர்களுடன் தங்கி இருந்து பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
அப்பாஸ் தங்கள் வீட்டில் தங்கி இருந்தது குறித்து நினைவுகூறும் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, பள்ளிப் படிப்பு முடியும் வரை சில ஆண்டுகள் தங்களுடன் வசித்து வந்ததாகவும், அவர் தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வகுப்புத் தோழன் என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இருவருமே அரசுப் பணியில் இணைந்துள்ளனர்.
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரை அப்பாஸ் சந்தித்து, கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.