இந்திய பிரதமர் மோடி பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நேற்று அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டின் ஏவியான் நகரில் ஜி7 மாநாட்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா நாடுகள் இடையே வர்த்தக மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்க திட்டம் (ஐஎம்இசி) உருவாக்கப்பட்டது. அதேபோன்று ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் தீவுகளையும் இணைத்து திட்டங்களை நாம் உருவாக்க முடியும்.
ஜி 7 நாடுகளின் வளம், இந்தியாவின் திறமை ஆகியவற்றை இணைத்து இதை நாம் செய்ய முடியும். அதேபோல் வர்த்தகம் மற்றும் தொடர்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச அணிதிரட்டலை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம். நமது கேள்வி மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தோ அல்லது வர்த்தக புள்ளி விரங்கள் குறித்தோ இருக்கக் கூடாது. மாறாக யாருக்காக வளர்ச்சி, எந்தத் திசையில் வளர்ச்சி என்பது குறித்தே இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த போது இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா நாடுகள் இடையே வர்த்தக மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்க திட்டம் (ஐஎம்இசி) உறுவாக்கப்பட்டது. ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.




