“தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி…

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அனைனையர் தின வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!” என்று பதிவிட்டுள்ளார். 

https://twitter.com/mkstalin/status/1789514121316127214

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.