சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், கேப் வெடி தயாரிக்கும் பணியில் மன்குண்டாம் பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி, பானு ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டதில் முருகேஸ்வரி மற்றும் பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை போராடி அனைத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து காவல்துறையினரும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.