ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட் விவகாரம் – 2வது நாளாக தொடர்ந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்பு

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி…

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார்.

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி வருகின்றன. இதனால் கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அப்போது அவை தலைவரின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக ஆம்ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் எஞ்சிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் நீக்கவைக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொண்டு வந்தார். அதற்கு அவையின் ஒப்புதலைப் பெற்ற மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எஞ்சிய மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் நீக்கிவைக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.