டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தமிழ் தகுதி தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதிய இத்தேர்வில், 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. அதன்படி காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, தமிழ் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்கு அளித்தும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வை வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், பார்வை மாற்றுத்திறனாளிகள் தமிழ் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.