மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலப் பெருமை கொண்ட திருக்கோவிலாகவும் இந்த திருக்கோயில் விளங்குகிறது.
விழாவையொட்டி முன்னதாக மேளதாளங்கள் முழங்கிட புறிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் மங்களவாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட கொடி ஏற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கூடலழகர் பெருமாள் மற்றும் மரகதவள்ளி தாயாருக்கு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா துவங்கியதையடுத்து பெருமாள் தினமும் சிம்மம், அன்னம், அனுமார் வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
வரும் 5-ம் தேதியன்று ஏகாந்த சேவை பல்லக்கில் தெப்ப முட்டுதல் நிகழ்ச்சியும், 6-ம் தேதியன்று தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடாகி இரவு உபயநச்சியாருடன் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
-K.R. Anaka







