ஆதிச்சநல்லூர் உட்பட மூன்று இடங்களில் தமிழகத் தொல்லியல்துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணியும் தொடங்கியது. சிவகளையில் நடைபெற்ற அகழாய்வில் கல் வட்டங்களும், முதுமக்கள் தாழிகளும் கிடைத்தன. அதேபோல் கொற்கையில் நடைபெற்ற அகழாய்வு பணியில் 2,700 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமான அமைப்பும், சங்க இலக்கியத்தில் கூறப்படும் கொற்கையில் சங்கறுக்கும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் 3 இடங்களிலும் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நிறைவடைந்த பிறகு மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







