கொரோனா பாதிப்பு: நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஜோக்கர் துளசி காலமானார். அவருக்கு வயது 71. பிரபல நடிகர் ஜோக்கர் துளசி. நாடக நடிகரான இவர் 1976ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான ‘உங்களில் ஒருத்தி’என்ற…

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஜோக்கர் துளசி காலமானார். அவருக்கு வயது 71.

பிரபல நடிகர் ஜோக்கர் துளசி. நாடக நடிகரான இவர் 1976ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான ‘உங்களில் ஒருத்தி’என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து மன்மத லீலை, மருதுபாண்டி, திருமதி பழனிசாமி, புதுமைப்பித்தன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் உட்பட பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். கோலங்கள், வாணிராணி, கஸ்தூரி, அழகு உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ஜோக்கர் துளசி, அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார், மோகன் ராமன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சினிமா துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
………….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.