அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற…

முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக முதற்கட்டமாக 200 மாநகர பேருந்துகள் இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.