ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, நன்றி சொல்லி, வாழ்த்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இடைத்தேர்தலை முன்னிட்டு ஆதரவு கோரினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினோம். நன்றி தெரிவித்தோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தோம். அவரும் வருவதாக தெரிவித்துள்ளார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே திமுக பிரச்சாரத்தை தொடங்கினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திந்து, ஆதரவு கேட்க உள்ளோம். காங்கிரஸ் தலைமை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனை, மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எதிரணியில் உள்ளவர்கள் குழப்பத்தில் இருப்பதால், இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.