ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக் உயர்த்த மத்திய பாதுகாப்பு துறை இலக்கு நிர்ணையித்துள்ளது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
முதல் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு ஐஎன்எஸ் காந்தேரி, ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த கல்வாரி வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஐஎன்எஸ் வகிர் கப்பல் 67.5 மீட்டர் நீளமும் 6.2 மீட்டர் அகலமும் உடையது. எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகல் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தங்கியிருக்க முடியும்.







