முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிரேனில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவிக்க முயன்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது திடீரென கிரேன் நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் 8 பேர் படுகாயங்களுடன் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 பேரும், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்குக் கொண்டு வந்தனர். இதில் முத்து(42), கூலி வேலை பூபாலன்(39) ஐஸ் வியாபாரி ஜோதி (19) கீழ் வாதம் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

மேலும் இருவர் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சின்ன சாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

கோயில் திருவிழாவில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்

Jeba Arul Robinson

நடிகர் பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் வழக்கு

EZHILARASAN D

பேரறிவாளன் விடுவிப்பு: முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

Halley Karthik