உயர்கல்வியில் அனைத்தும் நல்ல துறைகள் தான் என்றும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் திறமைகளை வெளிப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்றும் பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி தெரிவித்தார்.
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் கோவை கொடிசியாவில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : அரசியல், சமூகம், வாழ்வியலில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழர்கள் – நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல்
இந்த கல்விக் கண்காட்சியில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வசதிக்காக ஆர்ச் முதல் கொடிசியா வரை இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பேராசியர் முனைவர் கு.ஞானசம்மந்தன், பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி, பெஸ்ட் கல்வி அறக்கட்டளை செயலாளர் அப்துல் ரஷீத், மனித வளம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் தலைமைச் செயல் அதிகாரி அனுஷா ரவி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் உயர்கல்வியில் எல்லா துறைகளும் நல்ல துறை தான் என கூறினார். மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் திறமைகளை வெளிப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.







