தமிழ்நாடு முழுவதும் கடைகளை அடைத்து ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க தலைவர் மீது  நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாய விலைக் கடை  பணியாளர் சங்க மாநில…

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க தலைவர் மீது  நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியாய விலைக் கடை  பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை  கொலை  வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் ரேசன்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் 19 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.