கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குமரி
மாவட்டத்தின் முதல் பெண் ஓதுவாராக திருச்சியை சேர்ந்த பிரசன்னா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி அம்மன்
கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களை
தவிர வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். காசி,
ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்வதை வட மாநிலத்தவர்கள் புனிதமாக கருதுகின்றனர்.
இதனால் கன்னியாகுமரி ஓதி அம்மன் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிக
அளவில் காணப்படும். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஓதுவர் நியமிக்கப் படவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பெண் ஓதுவர் ஒருவரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த பிரசன்னா தேவி என்ற பெண் கன்னியாகுமரி பகவதி அம்மன்
கோவிலுக்கு ஒதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட
திருக்கோவில்களின் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஓதுவர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
—ம. ஶ்ரீ மரகதம்







