“அமைச்சராக இருந்தாலும் நானும் ஓர் எம்.எல்.ஏ. தான்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நானும் எம்.எல்.ஏ.தான் எனக்கும் அந்த நிலைமை புரியும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார். விளாத்திகுளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து, புதூரைத் தலைமையிடமாகக் கொண்டு…

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நானும் எம்.எல்.ஏ.தான் எனக்கும் அந்த நிலைமை புரியும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

விளாத்திகுளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து, புதூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 89 வருவாய் கிராமங்களைக் கொண்டிருப்பதால் அதை 2-ஆக பிரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், “நான் நின்று ஜெயித்த தொகுதி என்பதால், விளாத்திகுளம் தொகுதியின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும், முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் புதிய வருவாய் வட்டங்கள் வேண்டும் என்று கேட்டிருப்பதால், முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராக இருந்தாலும் நானும் ஒரு எம்.எல்.ஏ. தான். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் எனக்கும் புரிகிறது. கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்களின்படி பேரவை முடிவதற்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.