தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

2020 மற்றும் 21ம் ஆண்டிற்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள…

2020 மற்றும் 21ம் ஆண்டிற்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்திய
அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு
போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம்,
கயத்தார், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தாலுகாக்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம்,
கம்பு, உள்ளி, மிளகாய், மல்லி உள்ளிட்ட பயிர்கள் பெருவாரியாக விவசாயிகள்
விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்
காரணமாக பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதனை தமிழக அரசு
கணக்கெடுத்து சேதத்திற்கு நிவாரணமும் வழங்கியுள்ளது.
அதேபோல் கடந்த 2020 மற்றும் 2021 விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து
பிரீமியம் செலுத்தி உள்ளனர். ஆனால் மழை வெள்ளத்தின் காரணமாக பயிர் சேதம் என
அரசு அறிவித்த நிலையிலும் பயிர்காப்பீடு நிறுவனம் மூலமாக கிடைக்க வேண்டிய உரிய
காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை. மேலும் இந்த ஆண்டும் தொடர்
மழையின் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இது வரையில் நிவாரணம்
அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள்
கூட்டத்தில் விவசாய சங்கம் மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனாலும் தற்போது வரை
நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தமிழ்நாடு விவசாய சங்கம்
சார்பில் இந்தப் பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர்
அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் கூறும்போது
பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து பயிர்களுக்கும் பயிர்
காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு தொடர் மழையின்
காரணமாக முற்றிலும் அழிந்து போன பயிர்களுக்கும் புதிய காப்பீடு வழங்க
வேண்டும். விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள வேம்பார், விளாத்திகுளம்
தாலுக்காகளில் உள்ளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு மற்ற இடங்களில் வழங்கியது
போல் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அத்துடன் தற்போது
வழங்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் தொகையானது மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக ஒரு
ஏக்கர் மக்காச்சோளத்துக்கு 500 ரூபாய் இழப்பீடாக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிலரது வங்கி கணக்குகளில் வெறும் ஒரு ரூபாய் இழப்பீடு நிவாரணம் என்று
வழங்கப்பட்டு உள்ளது. எனவே இதனை முறை செய்து முறையாக பிரீமியம் கட்டிய அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துனார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.