சிவகார்த்திகேயனின் SK 20 திரைப்படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை மரியா!
முதன்முறையாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் SK20. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தயாரிப்பில் மற்றும் இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகிறது.
இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியோபோஷாப்கா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘எடெர்’ (Eter) என்னும் பிரபல திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற ஹிந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஒப்பந்தமாகியிருக்கும் SK20 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் முதன்முறையாக வெளிநாட்டு நடிகையுடன் சேர்ந்து நடிக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.







