பெண்களுக்கான இலவச பேருந்து வசதி குறித்து சந்தேகம் எழுப்பிய எம்.எல்.ஏ. செல்லூர் ராஜுவின் கேள்விக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கும் கேள்வி நேரத்தில், குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்கின்றனர். அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அது பற்றி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “மகளிருக்காக இலவச பேருந்து வசதி என்பது முதலமைச்சரின் கனவுத்திட்டம். சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும். அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது என்றும் போக்குவரத்துத்துறை ஏற்கனவே 48,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.