நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனையடுத்து, மார்ச் 1-ம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேலுள்ள இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
நாட்டில் தற்போது வரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்த எண்ணிக்கையாக 6,87,89,138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.







