ஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகி 11-ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 11ஆம்…

ஈரோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகி 11-ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற இளைஞர் அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர் ஈரோடு சென்று அந்த மாணவியை சந்தித்துள்ளார். இருவரும் சேர்ந்து திருமணம் முடித்து கொண்டு சேலத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே, பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் பெருந்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை ஆசை வார்த்தை கூறி ரங்கநாதன் திருமணம் செய்தது தெரியவந்தது.பின்னர் ரங்கநாதனிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.