சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த டிஜி புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக கைத்தறி துறை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையுடன் இணைந்து நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
இம்முகாமினை மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் தமிழ் செல்வன் துவக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பொது மருத்துவம்,சித்த மருத்துவம்,சர்க்கரை நோய் பிருவி,இதய சிகிச்சை,எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இலவச பரிசோதனை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மக்களுக்கு தேவையான இசிஜி,எக்ஸ்ரே,ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.இம்முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
வேந்தன்