ரஜினியின் தோற்றத்தை வடிவமைக்க பிரபல சிகை வடிவமைப்பாளர் ஆலிம் ஹக்கீம் தலைவர் 170 படக்குழுவில் இணைந்துள்ளார்.
இந்த அக்டோபர் மாதமே அப்டேட் மாதமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் இந்த மாதம் வெளியாக உள்ள லியோ படத்தின் அப்டேட்கள் வரிசை கட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் அப்டேட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் வரத் தொடங்கி உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வாகி உள்ள அப்டேட் மற்றும் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை என்கிற அப்டேட்டும் வந்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபர் 4ல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாத லைகா நிறுவனம் நாளை தொடங்கவுள்ள தலைவர் 170 படம் குறித்த டீம் மற்றும் காஸ்டிங் அப்டேட்டை வெளியிட்டது.
இந்நிலையில், அவர் நடிக்க உள்ள 170வது படத்தில் புது ஹேர்ஸ்டைலில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் ஹக்கிம் ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒன் அன்ட் ஒன்லி ரஜினிகாந்த் சென்னையில் ரஜினிகாந்த் சாருடன் ஒரு நாள் இருந்தேன். கலை மீதான அவரது ஆர்வம், சுற்றியுள்ள அனைவரையும் ஊக்குவிக்கும். அதுதான் அவர் ராஜாவாக இருக்கக் காரணம். விரைவில் உற்சாகமான ஒன்று வர உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.