முக்கியச் செய்திகள் குற்றம்

காதலனிடம் சேர்த்து வைப்பதாக கூற பெண்ணிடம் , 40 சவரன் தங்க நகைகளை பறிப்பு; பொறிவைத்து பிடித்த காவல்துறை

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம், உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை பறித்த பஞ்சாப் ஆசாமிகள் இரண்டு பேரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் காதலில், தோல்வி அடைந்தார். இதை அடுத்து
அவர், இணையதளங்களை ஆய்வு செய்தார். இப்போது “ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்”என்ற
செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி
செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து சென்னை இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதை அடுத்து அந்த இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட, இரண்டு பேர் சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று பணம் அல்லது தங்கநகை கேட்டனர். இந்த இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து, அவர்களிடம் கொடுத்தார்.

தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள்
இளம் பெண்ணை, காதலனோடு இவரை சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த
இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ரூபாய் ஐந்து லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம், என்று மிரட்டினர். இதனால் பதறிப்போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.


அதன்பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த இளம் பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர்.

அந்த இளம் பெண் அந்த இளைஞர்களிடம், ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணம் நான் கொடுக்கிறேன் என்று பேசச் செய்தனர். அந்த இளைஞர்களும் அதற்கு சென்னை வருவதாக கூறினார்.

அந்த இளைஞர்கள் இருவரும் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான
நிலையம் வந்தனர். போலீசார சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர். அதோடு சாதாரண உடை அணிந்த போலீசார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

இளம் பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோசத்தில் பஞ்சாபில் இருந்து விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்திய போது, இவர்கள் இதைப்போல் இந்த போலியான
இணையதள த்தை தொடங்கி பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு
செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில்
அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்: மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

2 ஆண்டுகள் ஆகியும் தீராத வஞ்சம்…சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட இளைஞர் கழுத்து அறுத்து கொலை!

Saravana

டி.என்.பி.எல் 5வது சீசன் இன்று தொடக்கம்

Vandhana