ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் ஆயிரத்து 430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் 310 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மட்டும் 1206 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தலை காணொலி மூலம் கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!

இந்த நிலையில் ஈரோடு வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேரலை மூலமாக கண்காணித்தார்.  வாக்குப்பதிவு சீரான முறையில் நடைபெறுகிறதா? முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 77,183 ஆண்கள், 83,407 பெண்கள், 13 இதர பிரிவினர் என மொத்தம் 1,60,603 பேர் வாக்களித்துள்ளனர்.

இதனையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தல்: (5மணி நிலவரம்) LiveUpdate

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நுழைவு கதவுகள் மூடப்பட்டு,
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பெரிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், கருங்கல்பாளையம் காமராஜ் நகரவை மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றின் நுழைவு கேட் மூடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன.

ஆறு மணிக்கு மேல் வந்த 10க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளே அனுமதிக்க கோரி முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.