ஈரோடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் குற்றசம்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகும்.விவசாயம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் ஈரோட்டை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர்.கொங்குமண்டலத்தின் முக்கியமான நகரான ஈரோட்டிலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா,கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை,சென்னை,திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் பயணிக்கின்றனர்.
ஆனால் இங்குள்ள பேருந்து நிலையமோ அதற்கான தனித்துவத்தை இழந்து நிற்கிறது.ஏற்கனவே பேருந்து நிலைய கட்டுமான பணிகளால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம் கலை இழந்து நிற்பதுடன் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களால் மேலும் அவஸ்தையடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் செயல்படாமல் உள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் மக்கள்.மேலும் இங்குள்ள புறக்காவல் நிலையம் ஆரம்பத்தில் உதவி ஆய்வாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசாருடன் செயல்பட்ட நிலையில் தற்போது நான்கைந்து பெண் காவலர்களே பணியாற்றி வருகின்றனர்.
கட்டுமான பணிகளால் ஏற்கனவே காவல் நிலையத்தை கண்டுபிடிப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ள நிலையில் இந்த பிரச்சினை மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதை தடுத்து கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
-வேந்தன்