சாத்தான்குளத்தில் , 17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்திற்கு , நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பசுமை வீடு வழங்க நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி இவர் கணவரை
இழந்து தனியாக இரண்டு குழந்தையுடன் வசித்து வருகிறார். முதல் பெண் குழந்தை
பேச்சிதாய் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் ஐயப்பன்
ஐந்தாவது படித்து வருகிறான். லட்சுமி அந்தப் பகுதியில் முறுக்கு வியாபாரம்
செய்து, இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், சிறு வயதில் இருந்தே அந்த குழந்தைகள் மின்சாரம் இல்லாமல் , வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் விளக்கில் தான் படித்து வந்துள்ளனர். குழந்தைகள் மின்சாரம்
இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் பாடம் படித்த வீடியோ , சமூக வலைதளங்களில்
வைரலானது. இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , பார்த்த மூன்று மணி
நேரத்தில் அந்த மாணவியின் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இன்று அந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர்
செந்தில்ராஜ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ,
வீட்டை பார்வையிட்டு அந்த மாணவிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
மேலும், வீட்டின் தேவை என்ன என்று மாவட்ட ஆட்சியர் மாணவியின் குடும்பத்தினரிடம்
கேள்வி எழுப்பினார். அதற்கு நாங்கள் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்றும், தாயாருக்கு
அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் இலவச வீடு, கழிவறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் , மாணவியின் தாயாருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவாதம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து , இந்த குடும்பத்திற்கு என்ன தேவை என்றாலும் , உடனே செய்து தருவதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். இதையடுத்து அந்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கு.பாலமுருகன்
SVK COLLECTOR VISIT 16.03.23