சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இபிஎஸ்

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு, தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்…

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு, தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தேவர் சிலைக்கு தங்கக் கவசத்தை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , தேவர் குருபூஜையின் போது எங்கு அஞ்சலி செலுத்துவார் என்று கேள்வி எழுந்தது.

இதற்கு அதிமுக தலைமை, எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், மஃபாய் பாண்டியராஜன், வளர்மதி,கோகுல இந்திரா,அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் உள்ளிட்டோர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக சார்பில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, காமராஜ், ஆர்.பி உதயகுமார், விஜயபாஸ்கர், உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.