முக்கியச் செய்திகள் தமிழகம்

“தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள்”- அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்  செய்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி ஆகியோரும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு,  ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் (எ) செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் சிலைக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மூத்தத்தலைவர் ஹெச்.ராஜா மற்றும் ஆர்.கே.சு.ரேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும். முத்துராமலிங்க தேவரின் சித்தாந்தம், கொள்கையை பாஜகவால் மட்டுமே செயல்படுத்த முடியும். ஆளும் கட்சியினர் தமிழகத்தில் எதை வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற மிதப்பில் உள்ளது என்று கூறினார்.

இதைதொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பாஜக சார்பில் அக்கட்சியின்
மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்”: கிரெட்டா காட்டம்!

Nandhakumar

முழு ஊரடங்கு- நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எவையெல்லாம் இயங்கும்?

Vandhana

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சிறப்பு ரயில்!

Gayathri Venkatesan