இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினரின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு
காணப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி முதல்வர் இங்கு வாழைத்தார் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் கட்டிட பணிகள் 1 ஆண்டுக்குள் முடிவடையும் என்றார்.
இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினர் கொடுத்துள்ள கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இங்கு இருக்கிறேன். கடிதங்களை இன்னும் படிக்கவில்லை என்று தெரிவித்த அவர் ஆளுக்கு 2 கடிதங்கள் கொடுத்துள்ளனர். அவைகள் எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும், கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.







