அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், அனைவரின் கனவுகளும் நனவாக வழி பிறக்கட்டும் என தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறையட்டும் என குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தரட்டும் என கூறியுள்ளார்.
2023-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு, பொருளாதார மந்தம் ஆகிய நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம் என குறிப்பிட்டுள்ள அவர், அனைவருக்கும் அனைத்து நலன்களும் வளங்களும் கிடைக்க கடுமையாக உழைப்போம் என கேட்டுக்கொண்டுள்ளார்.