உடல் அளவில் பாதிக்கப்பட்டு நடமாடக் கஷ்டப்படும் நபர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐபோன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்த மனித மூளையின் செயல்பாட்டை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங் திட்டம் வெற்றிகரமாக குரங்கிடம் சோதனைச் செய்யப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் தனியார் விண்வெளி நிறுவனமான ‘SpaceX’ நிறுவனர் எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம்தான் நியூராலிங். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக குரங்கின் மண்டையோட்டில் சிப் ஒன்றைப் பொருத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து எலான் மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேஜர் என்ற பெயரிடப்பட்ட அந்த குரங்கு வீடியோ கேம் ஒன்றை ஜாய் ஸ்டிக் உதவியுடன் விளையாடுகிறது. இந்த விளையாட்டில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் போடவேண்டும். அப்படி அந்த குரங்கு பந்தை பெட்டியில் போடும் போதெல்லாம் அதற்கு ஒரு பைப் மூலம் உணவு அளிக்கப்படுகிறது. குரங்கு ஆரஞ்சு பெட்டிக்குள் பந்தை போடும் போது அதனுடைய மூளையில் உருவாகும் சமிஞ்கையை மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் கணிணிக்கு அனுப்புகிறது. இந்த தகவல் கணினியில் சேமிக்கப்படுகிறது. இப்போது குரங்கு பந்தை ஆரஞ்சு பெட்டியில் போட நினைத்தால்போதும் சிப் உதவிடன் குரங்கு ஜாய் ஸ்டிக் இல்லாமலே பந்தை ஆரஞ்சு பெட்டிற்குள் போட முடிகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இந்த சிப் கருவியைப் பொருத்துவதால் அவர்கள் கணினி உதவியுடன் மற்றவர்களுக்கு போன் செய்வது, கணினியில் வேலை செய்து, வீடியோ கேம் விளையாடுவது என பல விஷயங்களை மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்யவைக்க முடியும் என்பதுதான் நியூராலிங் திட்டத்தின் நோக்கமாகும். தற்போது இந்த நியூராலிங் சிப் குரங்கின் மூளையில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் இயந்திரங்களைக் கட்டுப்படுத்திய காலம் மாறி இனி இயந்திரங்கள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.