தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 1 வாரமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







