வீதியின் நடுவே மின்கம்பத்தை வைத்து சாலை பணிகளை முடித்ததால் பொதுமக்கள் அவதி அதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் அருகே கொற்கை, பம்பப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி சமீபத்தில் நடைபெற்றது.இதில், சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் அமைக்கும் முன்னரே, மின்கம்பத்தை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்க பணியை முடித்தது சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் தான் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது எனவே நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெற, உரிமம் புதுப்பிக்க, இருசக்கர நான்கு வாகனம்பதிவு செய்யவும் வருகின்றனர்.

பொது வாகனங்கள் தகுதி சான்று பெறவும் வாகனங்களுடன் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நடுவே மின்கம்பம் இருப்பதை அறியாமல், சற்று வேகமாக வந்தால் மின் கம்பத்தின் மீது மோதி விபத்து நேரிடும் . இதில் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் அதிகமாக விபத்து நேரும் அபாயம் உள்ளது.சாலையின் நடுவே ஒன்று இரண்டு அல்ல, எட்டு மின் கம்பங்கள் அமைந்துள்ளது.
ஆனால் மின்கம்பங்கள் இருந்தும் மின் விளக்கு இல்லாதததால் எந்த பயணம் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . விபத்து, உயிரிழப்பு இவற்றை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல், கவனக்குறைவாக சாலை விரிவாக்க பணி மேற்கொண்டு, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது . தமிழக அரசு விரைந்து ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே அமைந்துள்ள எட்டு மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றி, சாலையோரத்தில் அதனை மாற்றி அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்







