முக்கியச் செய்திகள் தமிழகம்

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை நீக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணியை  தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதார்கள் அனைவரும் தகுதியானவர்களா என அரசு ஆய்வு செய்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இறப்பு பட்டியல், பத்திரப்பதிவு, நகைக்கடன் சரிபார்ப்பு, அரசு அலுவலரை கொண்ட குடும்பங்கள் என பல்வேறு கோணங்களில் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

40% மற்றும் அதற்கும் மேல் உடல் குறைபாடு உள்ளவர்களை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கணவரை இழந்து ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகன்கள் இல்லாத முதியோர்கள் உள்பட பலருக்கு சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலர் முறைகேடாக ஓய்வூதியம் பெற்று வருவது தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் தகுதியற்ற ஓய்வூதியதாரர்களை களையெடுக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கனில் மீண்டும் விமான சேவை – ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்

Mohan Dass

இலங்கையில் பொருளாதார நெருக்கடி; இந்திய அரசிடம் உதவி

G SaravanaKumar

பாடகர் கேகேவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம்: மருத்துவர்கள் தகவல்

EZHILARASAN D