முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் சீமான்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதில், அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில், இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரே மேடையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார். வழக்கம்போல், இந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, 50 சதவீதம் மகளிர் வேட்பாளர்களை களமிறக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Related posts

கருப்பு பூஞ்சையால் மக்கள் பயப்படவேண்டாம்: ராதாகிருஷ்ணன்!

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

Vandhana

ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

Jeba