முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை பாஜகவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவர் நியூஸ்7 தமிழிற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு பாஜக கூட்டணியும் அமோக வெற்றி பெறும்.” எனக் கூறினார்.

Advertisement:

Related posts

இனி மதுபானம் வாங்க வருபவர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்!

Karthick

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

Gayathri Venkatesan

ஒலிம்பிக் படகு போட்டியில் தகுதி பெற்ற முதல் தமிழக வீராங்கனை!