‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு…!

நடிகர் ரஜினிகாந்தின் 173 அவது திரைப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது 173 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

‘தலைவர் 173’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ப்லிம் இண்டர்நேஷன்ல் நிறுவனம் தயாரிக்கிறது. முதலில் இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகினார்.

தொடர்ந்து இப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தலைவர் 173 திரைப்படத்தை டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.