தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அட்டவணையை முந்தைய ஆண்டே தேர்வாணையம் வெளியிடும். அந்தவகையில் ஏற்கனவே வெளியிட்டுள்ள அட்டவணைப் படி இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்த தேர்வை, 21 முதல் 34 வயதுடைய அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றவர்கள் எழுத முடியும். இதில் முதல் நிலைத்தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




